ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு


Murugan| Last Modified ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (09:27 IST)
கர்நாடக டி.ஐ.ஜி. ரூபாவிற்கு ஜனாதிபதி விருது அளித்து கர்நாடக மாநில அரசு கௌரவித்துள்ளது.

 

 
சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக பல உண்மைகளை டிஐஜி ரூபா வெளியே கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
சிறையில் ஆய்வு நடத்திய அவர் சசிகலாவிற்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கு அங்க சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் அவர் புகர் கூறினார். இதனையடுத்து அவர் போக்குவரத்துதுறை அதிகாரியாக மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, கர்நாடக அரசு அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் ரூபாவிற்கு அந்த விருதை வழங்கினார்.

Widgets Magazine
webdunia

இதில் மேலும் படிக்கவும் :