Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? இந்தியா டுடே சர்வே

Last Modified வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (17:18 IST)
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு ஆட்சியை பிடிப்பது யார் என்று இந்தியா டுடே சர்வே எடுத்து அதன் முடிவை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
இந்த சர்வேயின்படி காங்கிரஸ் கட்சி 120 முதல் 132 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது. பாஜகவிற்கு 60 முதல் 72 தொகுதிகள் கிடைக்கும் என்றும், ஜனதாதள கட்சிக்கு 24 முதல் 30 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் முதல்வர் சித்தராமையா மீது அதிக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவர் மீண்டும் முதல்வர் ஆவாரா? என்ற சந்தேகமும் இருப்பதாக கர்நாடக மாநில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சர்வே எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதை மே 15ஆம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையின்போது தான் தெரியவரும்


இதில் மேலும் படிக்கவும் :