வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (21:12 IST)

கைகோர்த்த பிரகாஷ் ராஜ் - ஜிக்னேஷ் மேவானி: பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்!

வரும் மே மாதம் 12 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்ததும் மே 15 ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தேர்தலுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி பல வகைகளில் பிரசாத்திற்கு தயாராகி வருகிறது. ஆனால், இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க உதவும் சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எனவே தேர்தலில் வாக்கு வங்கியை பலப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சட்டசபை தேர்தலில் பிரகாஷ் ராஜ், ஜிக்னேஷ் மேவானி ஒன்றாக பிரச்சாரம் செய்ய உள்ளனர் எனவும் தெரிகிறது.
 
இதற்கு சேம்பிளாக குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்து பாஜகவுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
 
ஜிக்னேஷ் மேவானி, பிரச்சாரத்திற்கு வரும் மோடியிடம் கேள்வி கேளுங்கள். 2014 தேர்தலின் போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் என்ன ஆனது என்று என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ரூ.15 லட்சம் வங்கிக் கணக்குகளில் போடப்படும், 2 கோடி வேலைவாய்ப்புகள், கருப்பு பண மீட்பு வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் கேளுங்கள் என கூறியுள்ளார். 
 
அதேபோல் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவற்றை திசை திருப்ப பசு பாதுகாப்பு, கலாச்சார பாதுகாப்பு ஆகியவற்றை திணிக்கிறார்கள் என்று பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.