Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2017 (16:25 IST)

Widgets Magazine

கர்நாடக மாநிலத்தில் பாகஜவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 

 
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்து இருந்தார். அவர் கூறியதாவது:-
 
காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கையால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சாதி ரீதியாகவும், வர்த்தக ரிதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். மாந்தரீக செயல்பாடுகளால் அப்பாவி குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் போராட்டத்தில் சமூக செயற் பாட்டாளர்கள் தாக்கப்படுகின்றார்கள். 
 
இதை கண்டிக்க வேண்டிய ஊடகங்களும் மூடநம்பிக்கையை வளர்க்கும் ராசி பலனுக்கும், சனிப் பெயர்ச்சிக்கும், ஜோதிடத்துக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன. எனவே மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாஜகவை சேர்ந்த  சட்டமேலவை தலைவர் ஈஸ்வரப்பா, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மத நம்பிக்கையில் தலையிட முயற்சி செய்கிறது. பொதுமக்களின் நம்பிக்கையில் தலையிட சித்தராமையாவுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் பாஜக எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எடப்பாடி ஆட்சி இந்த மாதம் இறுதி வரைதான் - விஜயகாந்த் அதிரடி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி இந்த மாத இறுதி வரைதான் நீடிக்கும் என தேமுதிக ...

news

பிரபல பிளேபாய் இதழின் நிறுவனர் காலமானார்

பிரபல பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர்(91) நேற்று இரவு காலமானார்

news

ஜெ.வை பற்றி யாரும் பேசக்கூடாது : வாய் பூட்டு போட்ட டெல்லி

ஜெ.வின் மரணம் குறித்து இனிமேல் பொது இடங்களில் யாரும் பேசக்கூடாது என தமிழக அமைச்சர்களுக்கு ...

news

கணவனுக்காக கள்ளக்காதலனை எரித்துக் கொன்ற மனைவி...

கள்ளக்காதலனை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் ஒரு பெண் மற்றும் அவரின் கணவனையும் ...

Widgets Magazine Widgets Magazine