உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்: அதிரடியில் இறங்கிய கர்நாடகா!
சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் இரு முஸ்லிம் அமைப்புகளுக்கும் தடை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, குல்பர்கா, பெலகாவி உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டத்தின் பின்னணியில் பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் இந்த இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும், கர்நாடகாவின் அமைதிக்கு குந்தகமாக இருக்கும் இரு அமைப்புகளுக்கும் தடை விதிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, முடிவெடுக்கப்படும் எனவும் தெரிகிறது.