1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (16:59 IST)

நீதிபதியை கத்தியால் குத்திய மர்ம நபர்; பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் நீதிபதியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடகா தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள லோக் அயுக்தா அலுவகத்தில் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நீதிபதியை கத்தியால் குத்தியுள்ளார்.
 
சத்தம் கேட்டு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை தடுத்து, நீதிபதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நீதிபதியை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிபத்இ தக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
 
மேலும் நீதிபதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.