ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (17:54 IST)

500 பெண் சாதனையாளர்கள் கலந்துக்கொண்ட வாழ்க்கை – ஒரு மாய பயணம் நிகழ்ச்சி

60 நாடுகளில் இருந்து 250 பிரதிநிதிகள், 75 பேச்சாளர்கள், 150 கிராமப்புற பெண்கள், 30 கல்லூரிகளில் இருந்து இளம் பெண்கள் உள்ளிட்ட பெண்கள் கலந்து கொள்ளும்  8 வது சர்வதேச மகளிர் மாநாடு  சர்வதேச வாழும் கலை மையத்தின் பிரம்மாண்டமான விசாலாக்ஷி மண்டபத்தில்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உலக பார்வையாளர்களை ஈர்த்துத் துவங்கியது.


500க்கும் அதிகமான ஆற்றல் மிகுந்த, தைரியமான பெண்களின் முன்னிலையில் இந்த மாநாட்டில் டி.ருபா - ஐ.ஜி.பி கர்நாடகா, அருந்ததி பட்டாச்சார்யா - முன்னாள் தலைவர் (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா), சேத்னா காலா  சின்ஹா – நிறுவனர் & தலைவர் (மான் தேஷி வங்கி மற்றும் மன் தேஷி அறக்கட்டளை) ராணி முகர்ஜி - இந்திய நடிகை, டாக்டர். ஜிகோ ஹவேனி - ஃபிஜி பாராளுமன்றத்தில் முதல் பெண் பேச்சாளர் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிறப்புரையாற்றினர்.

"ஆன்மீகம் பாலினத்தை கடந்து செல்கிறது" என்கிறார் மாநாட்டில் உரையாற்றிய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள். மகளிர் மத மற்றும் ஆன்மீக அமைப்புகளை நடத்துவதற்கும் அவர் போரிடுகிறார். "அனைத்து நாடுகளிலும் பாலின சமத்துவம் மதிக்கப்பட வேண்டும். அதைச் செய்ய அதிகமான பெண்கள் மதத் தலைவர்களாக இருந்தால், அது வேகமாகவும் மென்மையாகவும் இருக்கும்” என்றார் அவர்.


நிதி, அரசியல், இசை, மருத்துவம், சமூக சேவை, கலை மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை பல்வேறு தொழில் துறைகளிலும், தனிப்பட்ட துறைகளிலும் வித்தியாசத்தை ஏற்படுத்தும் விதமாகவும், குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காகவும் விசாலாக்ஷி விருது வழங்கப்பட்டது.   

குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆண்கள் அளித்த பங்கிற்கு  ஆச்சார்யா ரத்நானந்த் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த இருபதாண்டு விருதுகள் குருதேவரின்  பெற்றோரின் சமுதாய சேவையின் நினைவாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் தனிநபர்களின் முயற்சிகளுக்கு மட்டுமல்லாமல், மனித உரிமை கொள்கைகள் கொண்டாடப்படும் விதமாகவும் அளிக்கப்படுகின்றன. விருதுகள் பற்றிய விரிவான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நாம் விழிப்புணர்வுடன், உயர்ந்த அழைப்புகளை ஆராயும் போது, நம் வாழ்க்கையில் புதிதாக சாத்தியக்கூறுகள் எழுகின்றன” என்று சர்வதேச மகளிர் மாநாட்டின் தலைவரான திருமதி பானுமதி நரசிம்மன் கூறினார்.

‘வாழ்க்கை - ஓர் மாய பயணம்’ என்ற தலைப்பில் நிகழும் இந்த மூன்று நாள்  மாநாட்டுக் கூட்டம் சிறப்புமிக்க பெண்கள், கலைஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் ஒன்று கூடி,  அமைதி அதிகாரம் பெறுதலுக்காக ஆன்மீக வழிகள் உட்பட அனைத்து சாத்திய வழிகளையும் ஆய்வு செய்யும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகும்.


மாநாட்டின் கருப்பொருளோடு இணைந்து, விருது பெற்ற இந்திய நடிகை ராணி முகர்ஜி பேசுகையில், "நடிப்பு என் குறிக்கோள் என்பது மாறிவிட்டது. அது விருதுகளை அடைவது  அல்லது பாக்ஸ் ஆபிஸை வெல்வது மட்டுமல்ல. இது மாற்றத்தை உருவாக்கும் திறனுடன் கூடிய கதைகளைக் கூறுவது ஆகும்" என்றார்.

இந்த ஆண்டு, சர்வதேச மகளிர் மாநாட்டில்  மையக்கருத்து,  இந்தியாவில் திறந்தவெளி கழிவுகள் இல்லாத மாவட்டங்களை உருவாக்க வேண்டும். கட்டம் 1-ல், 7 மாநிலங்களில் 12 கிராமப் பஞ்சாயத்துக்களில்  கழிப்பறைகளைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்துவதை  நோக்கி அமைந்துள்ளது. இரண்டாம் கட்டத்தில், 4000 கழிப்பறைகள் கட்டப்படும்.

மாநாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் ஜியான் அப்துல்லா மெரினி, நிறுவனர், ரோனேயின் அறக்கட்டளை, குர்திஸ்தான், திருமதி ரஸல் குஜ்ரால் அன்சல், வாழ்க்கை முறை வடிவமைப்பாளர், டாக்டர் விஜிதா எம்.ஏங்கோ, நிறுவனர் யு. சி.எல்.ஏ.-வின் பெண்கள் தலைமை முன்முயற்சியின் நிறைவேற்று பணிப்பாளர்;  மற்றும் அருந்ததி பட்டாச்சார்யா முன்னாள் வங்கியாளர்;  ஷாஹிகா அல் ஷிபா விளையாட்டு வீராங்கனை ஆகியோர் பேசுவர்.