திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (15:22 IST)

மலிவு விலையில் லேப்டாப்; ஜியோவின் அடுத்த அதிரடி! – எவ்வளவு தெரியுமா?

JioBook
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலை லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் முக்கியமானது ஜியோ நிறுவனம். இந்தியாவில் 4ஜி சேவையோடு நுழைந்த ஜியோ நிறுவனம் அந்த சமயம் பிரத்யேக 4ஜி ஸ்மார்ட்போன்களை அன்லிமிடட் டேட்டா வசதியுடன் வழங்கியது.


தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பட்ஜெட் லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது ஜியோ நிறுவனம்.

ஜியோபுக் எனப்படும் இந்த லேப்டாப் அடிப்படை அம்சங்களுடன் ரூ.15 ஆயிரம் விலையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த லேப்டாப் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த 3 மாதங்களில் பொதுசந்தைக்கு விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K