திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (12:23 IST)

ஆந்திராவில் வருகிறது அரசாங்க மதுக்கடை – ஜெகன்மோகன் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டை போல ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசாங்கமே எடுத்து நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர சட்டசபை தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமான ஒன்று ஆந்திரா முழுவதும் பூரண மது விலக்கு. ஆனால் ஆந்திரா முழுவதும் மதுக்கடைகள் தனியார் வசம் உள்ளன. மொத்தமாக 4377 உரிமம் பெற்ற கடைகளும், உரிமை பெறாமல் சிலவும் உள்ளது. இதற்கென தனி குழு அமைத்து ஆய்வு செய்த ஜெகன் மோகன் மதுக்கடைகளை நேரடியாக அரசாங்கமே எடுத்து நடத்தலாம் என முடிவெடுத்துள்ளார்.

இதன்படி 4377 மதுக்கடைகளை 3500 கடைகளை மட்டும் அரசாங்கம் நடத்தவும், மீதமுள்ளவற்றை இழுத்து மூடவும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 10000 மதுக்கடை பணியாளர்களை பணியமர்த்தவும் உள்ளார். இதன் மூலம் மதுக்கடைகளை குறைப்பது மட்டுமல்லாமல் வருவாயை நேரடியாக அரசாங்கத்திற்கு கொண்டு வரலாம் என்பது ஜெகன் மோகனின் திட்டம். இந்த மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என கூறியுள்ளனர்.