1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (17:28 IST)

குழந்தைகளை கவனிக்காமல் டான்ஸ் ஆடிய நர்ஸ்கள் – டிக் டாக் வீடியோவால் பரபரப்பு

ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் குழந்தைகளை கவனிக்காமல் டான்ஸ் ஆடி டிக் டாக் வீடியோ வெளியிட்ட செவிலியர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒடிசாவில் உள்ள புவனேஷ்வர் தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகளை பராமரிக்கவும், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் மூன்று செவிலியர்கள் குழந்தைகளை பாதுகாக்கும் தலையாய பணிகளை விட்டுவிட்டு நாள்தோறும் ஆடுவது, பாடுவது, காமெடி வ்சனங்களுக்கு வாயசைப்பது என விதவிதமாக டிக் டாக் வீடியோக்களை செய்து இணையத்தில் வெளியிட்டிருந்திருக்கிறார்கள்.

இந்த வீடியோக்களை பார்த்த பொதுமக்கள் “நீங்க குழந்தைகளை பராமரிக்கிற லட்சணம் இதுதானா?” என திட்டி தீர்த்துள்ளனர். இதுகுறித்து அந்த தலைமை மருத்துவமனை மூன்று செவிலியர்களுக்கும் விசாரணை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.