Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள்


Abimukatheesh| Last Updated: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (19:02 IST)
இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 

 
இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 320டன் எடையும், 44.4மீ உயரமும் கொண்ட இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
 
இந்த செயற்கைக்கோள் இயற்கை சீற்றம், பெரிடர் மேலாண்மை, கடல்சார் ஆகிய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படுகிறது
 
இந்த செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த தனியர் நிறுவனம் மூலம் செயற்கைக்கோளின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டது. இஸ்ரோ ஏற்கனவே வெற்றிகரமாக 7 செயற்கைக்கொள்களை விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்முறையாக இந்தியாவிலே தாயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :