வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:00 IST)

அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 
ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் அதில் இடைத்தேர்தல் நடத்திவிட வேண்டும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தல்கள் முன்னதாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
ஆம், 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் காலியாக உள்ள எம்.பி இடத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.