வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (16:46 IST)

புரட்டி எடுக்கும் கொரோனா: இந்தியா - பிரிட்டன் விமான சேவை தடை நீட்டிப்பு!

இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு
 
பிரிட்டனில் இருந்து பரவத்துவங்கிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவை மற்றும் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லும் விமான சேவைகளுக்கு டிசம்பர் 21 முதல் 31ந் தேதி வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது. 
 
கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவுவதை அடுத்து இந்த விமான சேவை தடை தற்போது மீண்டும் வருகிற ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி 7ந் தேதிக்கு பிறகு கடுமையான வழிமுறைகளை பின்பற்றி பிரிட்டன் - இந்தியா விமானப்போக்குவரத்து அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.