நித்யா மேனனுக்கு திருமணம் செய்ய துல்கர் எடுத்த முயற்சி!
நடிகை நித்யா மேனனை திருமணம் செய்துகொள்ள சொல்லி நடிகர் துல்கர் சல்மான் அறிவுரைக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் அவர். 32 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதுபற்றி அவரே பலமுறை பேசியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரின் நேர்காணல் ஒன்றில் எனது துல்கர் ஒரு குடும்பஸ்தர். அவர் என்னிடம் திருமணம் செய்து கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியம் பற்றி பலமுறை அறிவுரைக் கூறினார் எனக் கூறியுள்ளார். இருவரும் இணைந்து ஓ காதல் கண்மணி, உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.