1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 மே 2020 (08:44 IST)

பணத்தை திரும்ப அளிப்பதாக மோசடி செய்கிறார்கள்!- வருமானவரி துறை எச்சரிக்கை!

வருமானவரி துறை கட்டிய வரி பணத்தை திரும்ப அளிப்பதாக லிங்க் வந்தால் க்ளிக் செய்ய வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களால் வருமானம் ஈட்ட முடியாததை கருத்தில் கொண்டு அரசு கடன் உள்ளிட்ட சிலவற்றிற்கு கால நீட்டிப்பு அளித்துள்ளது. இந்நிலையில் வருமாவரி துறை வரி கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதாக போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் உலாவ தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வருமானவரி துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் “வருமான வரி தொகையை திரும்ப அளிப்பதாக ஷேர் ஆகும் எந்த லிங்க்குகளையும் வரி செலுத்துவோர் க்ளிக் செய்ய வேண்டாம். அவையெல்லாம் பொய்யானவை. அவ்வாறு எந்த சலுகையையும் வருமானவரி துறை அளிக்கவில்லை. இதுகுறித்து வரும் இமெயில் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் மோசடி செயலாக இருக்கலாம்.

எனவே மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு, ரகசிய எண் உள்ளிட்டவற்றை யாருடனும் பகிர வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.