1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:00 IST)

I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் 13 பேர்: தமிழக முதல்வர் பெயர் இருக்கிறதா?

I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெயரும் உள்ளது. 
 
I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நேற்று இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது,. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது. 
 
இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட 13 பேர் கொண்ட குழுவின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
கே.சி.வேணுகோபால், காங்கிரஸ்
சரத் பவார், என்.சி.பி
மு.க.ஸ்டாலின், தி.மு.க
அபிஷேக் பானர்ஜி, டி.எம்.சி
சஞ்சய் ராவத், சிவசேனா
தேஜஸ்வி யாதவ், ஆர்.ஜே.டி
லல்லன் சிங், ஜே.டி.யு
ராகவ் சத்தா, ஆம் ஆத்மி
ஹேமந்த் சோரன், ஜே.எம்.எம்
ஜாதவ் அலிகான், எஸ்.பி
டி.ராஜா, சி.பி.ஐ
உமர் அப்துல்லா, என்.சி
மெகபூபா முப்தி, பி.டி.பி
 
 
Edited by Mahendran