திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (14:58 IST)

மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து புகழ் திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும், மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அவர் பென்சி என்ற பெண்ணை மணந்தார்.

இந்நிலையில் இப்போது திருமண நாள் ஓராண்டு  நிறைவை அடுத்து தான் விரைவில் அப்பா ஆகப் போகும் மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளார். மேலும் அவரது பதிவில் “என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் புகழுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.