1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (16:49 IST)

இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ளாவிட்டால் சிறுபான்மையினராக வேண்டும்; பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் சிறுபான்மையினராகி விடுவோம் என்று பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சையாக பேசியுள்ளார்.

 
பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியதாவது:-
 
குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது கடவுள் அளிக்கும் வரமாகும். இந்துத்துவா நிலைத்து இருக்க இந்து தம்பதியினர் அனைவரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துகளின் எண்ணிக்க அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 
 
ஒவ்வொரு தமபதியினரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்து மத குருமார்களுடைய விருப்பமாக உள்ளது. இந்துகள் வலிமையாகும் போது இந்தியாவும் வலிமையாகும். இந்துகள் தொடர்ந்து பெரும்பான்மையினராக இருக்க வேண்டும். 
 
மக்கள் தொகையில் கவனம் செலுத்தவில்லை என்றால் இந்து சமுதாயம் இந்தியாவில் சிறுபான்மையினராகி விடுவார்கள்.