1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (16:30 IST)

வாஸ்து பிரச்சனை: பழைய அலுவலகத்திற்கு மூட்டை கட்டிய பாஜகவினர்!

பாஜக டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மார்க்கில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய தலைமை அலுவலகத்தை கட்டியது. ஆனால் இந்த அலுவலகத்திற்கு மாறிய பின் பாஜக தொடர் சறுக்களை சந்தித்து வருகிறது. 
 
எனவே, வாஸ்து பிரச்சனை என கூறி, அலுவலக செயல்பாடுகளை அசோகா சாலையில் இருக்கும் பழைய பாரம்பரிய கட்டிடத்திற்கே தங்களது தலைமையகத்தை பாஜக கட்சி மாற்ற இருக்கிறது.  
 
இந்த புதிய கட்டிடத்திற்கு வந்த பிறகு தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது. கர்நாடகாவில், பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும், பல மாநில தேர்தல்களில் தோல்வி அடைந்தது. 
 
தமிழகத்தில் பெரிய அளவில் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. முக்கியமாக ராகுல் காந்தி பெரிய அளவில் புகழடைந்து இருக்கிறார் என பல காரணங்களால் இந்த கட்டிடம் தற்போது மாற்றப்படுகிறதாம். 
 
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக பழைய அலுவலகத்தில் இருந்து செய்ய இருக்கிறது. இதன் மூலம் பாஜவின் தேர்தல் யோகம் எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.