வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:12 IST)

இணையத்தில் டிரண்டாகும் போருக்கு எதிரான ஹேஷ்டேக் -#saynotowar

இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவுவதால் போர் போன்ற அசம்பாவதிங்கள் நடக்கக் கூடாது என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரசரி 14 ஆம் தேதி புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கொஞ்ச நேரத்தில் இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை முதலில் இந்திய அரசு மறுத்தது. பின்னர் பாகிஸ்தான் ஆதாரங்களை வெளியிட்டதும் இந்திய அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து தற்போது இந்திய அரசு பாகிஸ்தானிடம் இருந்து அந்த விமானி அபிநந்தனை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலைத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தியாவின் சிலப் பகுதிகளிலும் பாகிஸ்தானில் அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையில் போர் மூளும் சூழல் உருவாவது போன்ற தோரனையை உருவாக்கின.

இதையடுத்து இணையத்தில் உள்ள சிலரும் போரை ஆதரிக்கும் விதமாக பல கருத்துகளைப் பகிர ஆரம்பித்தனர். உண்மையில் இவர்கள் போரின் விளைவுகளை அறிந்துதான் இத்தகைய பதிவுகளை இடுகிறார்களா அல்லது இப்போது இருக்கும் சூழ்நிலையால் உணர்ச்சி வசப்பட்டு பேசிகிறார்களா என்ற சந்தேகம் உருவானது. உண்மையில் போர் என்ற ஒன்று உருவானால் அது இரண்டு நாடுகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக மாறிவிடும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட இந்திய அரசுக்கு அனுப்பிய கானொலியில் கூறியிருந்தார்.

இதனையடுத்து போருக்கு எதிரான கருத்துகள் மெல்லமாகப் பரவ ஆரம்பித்தன. சமூகவியலாளர்கள் இதற்கு முன்னர் நடந்தப் போர்களைப் பற்றியும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றியும் விவரங்களைப் பகிர ஆரம்பித்தனர். அதன் பின்னர் say no to war என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி போருக்கு எதிரானக் கருத்துகளைப் பகிர ஆரம்பித்தனர். அனைவரும் இதுபோல கருத்துகளைப் பகிர அந்த ஹேஷ்டேக் டிரண்ட் ஆனது. பாகிஸ்தானிலும் இது போல போருக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் உருவாக ஆரம்பித்தன.