திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (22:12 IST)

கார் விபத்தில் இறந்த என்.டி.ஆர் மகனின் கடைசி ஆசை

முன்னாள் ஆந்திரபிரதேச முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் மகனும் பிரபல தெலுல்ங்கு நடிகருமான ஹரிகிருஷ்ணா இன்று காலை சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். அவரது மறைவால் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி ஹரிகிருஷ்ணாவின் 62வது பிறந்த நாள் வரவுள்ளது. இந்த பிறந்த நாளில் தனது ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஹரிகிருஷ்ணா தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் வரும்  செப்டம்பர் 2 ஆம் தேதி வரவுள்ள தனது 62வது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், தனது பிறந்த நாளுக்கு செலவு செய்யும் பணத்தை கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறும் அறிவிறுத்தியுள்ளார். ஹரிகிருஷ்ணாவின் கடைசி ஆசையை அவரது ரசிகர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.