ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (10:35 IST)

நாளை பதவியேற்பு; நீதிமன்றத்தில் வழக்கு: ஹர்திக் பட்டேல் திட்டம் என்ன??

நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்கள் பெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்பது விதி. பாஜக 99 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. 
 
ஆனால், இந்த தேர்தலில் நாளை (டிசம்பர் 25) பாஜக அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடக்கவிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்குர் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் செயல்பட்டனர்.
 
இந்நிலையில், தேர்தலில் பாஜக-வின் வெற்றி உண்மையான வெற்றி அல்ல என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறியதாவது... 
 
பாஜக வெற்றி பெற்றிருப்பதற்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்த மோசடியே காரணம். பாஜகவின் வெற்றியை எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். வெற்றி, தோல்வியை தாண்டி பலவீனமான காங்கிரஸ் பலம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. இதற்காக பெருமைப்படுகிறேன். 
 
வாக்கு இயந்திரங்களில் நடந்த முறைகேடுகளால் மட்டுமே பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் அந்தக் கட்சி 78-81 இடங்களையே பிடித்திருக்கும். இது வெற்றியல்ல, ஊழல் என்று தெரிவித்திருக்கிறார் ஹர்திக் பட்டேல்.