திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (17:20 IST)

மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு; அருண் ஜெட்லி அறிவிப்பு

குஜராத் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

 
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. காங்கிரஸ் 79 தொகுதிகளில் வெற்றிப்பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. கடந்த முறை 115 இடங்களில் வெற்றிப்பெற்ற பாஜக இந்த முறை சற்று சரிவை சந்தித்துள்ளது.
 
மோடி பிரச்சாரம் செய்த பல இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ரூபானி மீண்டும் குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.