வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 மே 2019 (15:16 IST)

வேலையவிட்டா தூக்கர.. நிர்வாகத்தை கதறவிட்ட பெண்: வைரல் வீடியோ!

வேலையைவிட்டு தூக்கியதால் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை கதறவிட்டுள்ளார் ஹரியானாவை சேர்ந்த பெண் ஒருவர். 
 
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில், இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். திடீரென அந்நிறுவனத்தின் நிர்வாகம் அந்த பெண்ணை வேலையைவிட்டு தூக்கியுள்ளது. 
 
இதனால் அந்த பெண் நிறுவனத்தின் மொட்டைமாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். அதேபோல் மாடி ஏறி தடுப்புச்சுவரின் நுனியில் நின்றுள்ளார். 
 
இதனால் பதரிப்போன சக ஊழியர்களும் நிர்வாகிகளும் அப்பெண்ணை சமாதனம் படுத்த முயன்றனர். காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து சமரசம் பேசியும் அந்த பெண் கேட்பதாய் இல்லை. 
 
எனவே, நிர்வாகம் மீண்டும் அவரைப் பணியில் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தனர். அதன்பின்னரே அப்பெண் கீழிறங்கி வந்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதியப்பட்டு சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.