சொகுசு வாழ்க்கை வாழ்ந்த குர்மித் சிங் சிறையில் ஒப்பாரி....


Murugan| Last Modified செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (14:19 IST)
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் குர்மித் சிங், விடிய விடியை அழுதே கொண்டே இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

 

 
பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து அவர் நேற்றே அவர் அரியானா மாநிலத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அலுமினிய தட்டு, டம்ளர், மண்பானை ஆகியவை மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.
 
ஆசிரமத்தில் அவருக்கு அரியான அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது. மேலும், சொகுசு வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார்.  இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டதால் நேற்று முழுவதும் சோகத்துடனே காணப்பட்டாராம். எந்த கைதிகளுடன் அவர் பேசவில்லையாம்.
 
மேலும், சிறை தண்டனையை நினைத்து விடிய விடிய அழுதே கொண்டே இருந்தாராம் சாமியார்...


இதில் மேலும் படிக்கவும் :