ஓவியா வெளியேற்றத்தால் கண் கலங்கிய கமல்: துலங்குமா உண்மை?

ஓவியா வெளியேற்றத்தால் கண் கலங்கிய கமல்: துலங்குமா உண்மை?


Caston| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (16:11 IST)
நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஓவியா ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மீதும் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.

 
 
நேற்று இரவிலிருந்தே ஓவியாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் இருந்து ஓவியா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வந்தது.
 
இதனையடுத்து ஓவியா தனது பிக் பாஸ் வெளியேற்றம் குறித்து பரவி வந்த தகவல் குறித்து விளக்கம் அளித்தார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான். மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார்.
 
இதனையடுத்து ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் அந்த தொலைக்காட்சிக்கு கூட ஓவியா வெளியேறியதில் விருப்பம் இல்லை. அவர் மீண்டும் வருவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
இந்நிலையில் வழக்கமாக காலையில் வெளியாகும் பிக் பாஸ் புரோமோ வீடியோ இன்று பிற்பகலில் தான் வெளியானது. அதில் கமல் ஹாசனும் ஓவியாவின் வெளியேற்றத்தால் கண் கலங்கி தான் இருந்தார். கண்களுடன் சோகமான அதே நேரத்தில் புதிரான குரலில் பேசினார் கமல்.
 
அப்போது கலங்கிய உள்ளம் என ஓவியாவை குறிப்பிட்டார். புலம்பிய இல்லம் என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை குறிப்பிட்டார். மேலும் துலங்குமா உண்மை என ஆரவ், ஓவியா இடையே நடந்த உண்மை என்ன, யார் மீது தப்பு இருக்கும் என அந்த பிரச்சனையை குறிப்பிட்டார்.
 
பல்வேறு குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்களுடனுன், சங்கடங்களுடனும் இன்று வெளியாக உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :