வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (16:27 IST)

உங்களுக்கு முட்டை பிடிக்காவிட்டால் கடையை மூட சொல்வதா? – குஜராத் நீதிமன்றம் காட்டம்!

அகமதாபாத்தில் வெளிப்படையாக இறைச்சி கடைகள் செயல்பட விதித்த கட்டுப்பாடுகளுக்கு குஜராத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படி இறைச்சி, முட்டை உணவுகளை கண்முன்னே சமைக்கும் உணவகங்களால் சைவ உணவு உண்பவர்கள் மனம் புண்படுவதாக கூறி வெளிப்படையாக இறைச்சிகளை சமைத்து விற்க மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “மக்கள் முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என அதிகாரத்தில் உள்ள கட்சி நினைத்தால் கடைகளை தூக்கி தூர எறிந்து விடுவீர்களா? மக்களிடையே இப்படி பாகுபாடு காட்டுவது முறையா?” என மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.