செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:37 IST)

ஒரு ரூபாய்க்கு நேப்கின் – மத்திய அரசு புதிய திட்டம் !

பெண்களின் சுகாதாரத்துக்காக ஒரு ரூபாய்க்கு நாப்கின் விற்கும் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா.

மாதவிடாய்க் காலங்களில் நகர்ப்புறங்களைச் சேர்ந்த 78 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர் என 2016ல் தேசிய சுகாதார கணக்கெடுப்பின் போது அறிவிக்கப்பட்டது. கிராமப்புறத்திலோ வெறும் 48 சதவீதம் பேரே பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முக்கியக்காரணமாக நாப்கின்களின் விலை அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் ஜன் அவ்சதி கேந்திரா மருந்துக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு நாப்கின்கள் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 4 நாப்கின்கள் கொண்ட பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இப்போது அது 4 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. உள்ள 5500 ஜன் அவ்சதி கேந்திரா மருந்துக் கடைகளில் இந்த நாப்கின்கள் கிடைக்கும் என்று மத்திய ரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மன்சுக் மந்தாவியா தெரிவித்துள்ளார்.