1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (20:14 IST)

அரசு அதிகாரி வீட்டில் ரூ. 100 கோடி சொத்துக்கள் பறிமுதல்...

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரியின் வீட்டிலிருந்து ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரியாக வேலை செய்த சுப்பிரமணி என்பவருகு இந்திய வருவாய் பணி அதிகாரியான சாகி ராம் மீனா மிகக்கடுமையான நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.
அதன் பின்னர் சாகி ராம் மீனாவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது அவர் ரூ. 1 லட்சம் பெரும் போது வசமாக சிக்கினார்.
 
இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் தான் இவ்வளவு சொத்துக்களை வளைத்துப் போட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்து பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதும் தெரியவந்துள்ளது.