வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (16:56 IST)

சூப்பர் ஸ்டார் அருகில் அமர்ந்திருக்கும் நடிகை ...வருத்தெடுக்கும் நெட்டிஷன்ஸ்...

மலையாள  சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா என்ற படத்தில் மம்முட்டிக்குதம்பியாக நடிக்கிறார் ஜெய். மேலும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டேன்ஸ் யார் ஆடுகிறார்கள் தெரியுமா...? ஆம் ! சன்னி லியோன் தான்.
தற்போது மதுர ராஜா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில்  ஷூட்டிங் ஸ்பாட்டில் மம்முட்டிக்கு அருகில் சன்னி லியோன் உட்கார்ந்திருக்கும் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிஷன்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர். சன்னி சேச்சி என்று அழைத்து அவரை பார்க்க முந்தியடித்த கேரளா ரசிகர்களே இப்படி விமர்சனத்தை பதிவிடுவதுதான் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.