Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சந்து பொந்துகளில் புகுந்து செல்ல வேண்டுமா? இதோ கூகுள் மேப்பின் புதிய வசதி

Google Map
Last Updated: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (19:12 IST)
டிராபிக்கில் சிக்கி தவிக்கும் பைக் ஓட்டுநர்களுக்கு கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்பில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

 
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் பயன்படுத்தாத நபர்கள் யாருமே இல்லை என கூறலாம். வழி தெரியவில்லை என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது கூகுள் மேப் தான். யாரிடமும் வழி கேட்க வேண்டாம். செல்ல வேண்டிய இடத்தின் பெயரை டைப் செய்தால், நாம் இருக்கும் இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் வழிகாட்டும்.
 
இது புதிய இடங்களுக்கு செல்பவர்களுக்கு பெரும் உதவியாய் உள்ளது. இந்நிலையில் கூகுள் மேப், டூவிலர் மோடு என பிரத்யேகமாக புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி முதல்முறையாக இந்தியாவில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த வசதி மூலம் பைக் ஓட்டுநர்கள் டிராபிக் குறித்தும் பைக் செல்லும் வகையில் உள்ள சாலைகள் குறித்து எளிதாக கண்டறிய முடியும். இதுகுறித்து கூகுள் துணைத்தலைவர் சீசர் சென்குப்தா கூறியதாவது:-
 
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனச் சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் பைக் பயணத்தின் போது உள்ளூர் அடையாள தலங்களை நினைவில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதன்படி வான ஓட்டிகள் செல்லும் வழியில் உள்ள உள்ளூர் அடையாளத் தலங்கள் அனைத்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கூறினார். 
 
மேலும் இந்த வசதி அடுத்தடுத்து சில நாட்களில் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :