வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2016 (16:40 IST)

பொதுக் கழிப்பறைகளைக் கண்டறிய உதவும் கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இனி கூகுள் மேப்ஸ் உதவியுடன் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பறைகளைக் கண்டறியலாம்.


 

 
கூகுள் மேப்ஸ், சாலைகள், விலாசம், டிராஃபிக், என பல தகவல்கள் கொண்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி கூகுள் மேப்ஸ் மூலம் உங்கள் அருகாமையில் உள்ள கழிப்பறைகளைக் கண்டறியலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
தற்பொது இந்த பொதுக் கழிப்பறைகளைக் கண்டறியும் வசதி டெல்லி, என்.சி.ஆர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை 'Toilet Locator' மூலம் பயன்படுத்தி நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் செல்லக்கூடிய இடங்களில் உங்கள் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பறைகளைக் கண்டறியலாம்.
 
இது நாடு சுகாதார வளர்ச்சிக்கு உதவியாய் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கூகுள் மேப்ஸ் மேலாளர் சங்கேத் குப்தா கூறியதாவது:-
 
இனி யாரிடமும் பப்ளிக் டாய்லெட் எங்கு இருக்குறது என்று கேட்டு அழைய தேவையில்லை. கூகுள் மேப்ஸ் தட்டினால் நொடியில் பப்ளிக் டாய்லெட் இருக்கும் இடத்தை கண்பித்துவிடும். தற்போது வரை 4000 பொதுக் கழிப்பறைகளின் விவரங்கள் கூகுளில் சேர்க்கப்பட்டுள்ளது.