1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (09:20 IST)

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

Tirupathi Laddu

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்ததால் ஏற்பட்ட தீட்டை கழிக்க அதிகாலை முதலே அர்ச்சகர்கள் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர்.

 

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் லட்டை ஆய்வு செய்ததில் அது உறுதியும் ஆனது. அதை தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது.

 

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கூறி வரும் நிலையில் திருப்பதி கோவிலில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்த்ததால் ஏற்பட்ட தீட்டை நீக்கும் பணியில் அர்ச்சகர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, லட்டு தயாரிக்கும் பணிமனை முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
 

 

இன்று காலை 6 மணிக்கு தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர் தலைமையில் 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் கலந்து கொள்ள யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள், தீட்டு நிவர்த்தி அடைந்து புனிதம் திரும்பும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K