இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த இயக்குனர் - போலீசாரிடம் புகார்


Murugan| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (13:45 IST)
தன்னை ஒரு சினிமா இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக, ஒரு இளம்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ள விவகாரம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மராத்தி பட இயக்குனர் அப்ப பவார் இயக்கும் ஒரு புதிய படத்திற்கு புதுமுகங்கள் தேவை என்பதை அறிந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சமீபத்தில் அந்த ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார். அப்போது இயக்குனர் அப்பா பவர் மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் அங்கு இருந்துள்ளனர்.
 
அதன் பின், அப்பெண்ணை கடந்த 6ம் தேதி இயக்குனரின் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அந்த இளம்பெண் அங்கு சென்றுள்ளார். அப்போது, அப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக அவரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
அப்போது, இயக்குனர் அப்பா பவார் அப்பெண்ணை தனது அறைக்கு அழைத்து சென்று, எனது அடுத்த இரண்டு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன்.  ஆனால் என்னுடைன் நீ படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :