ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (08:17 IST)

வட மாநிலங்களை மிரட்டும் பேய் மழை! ஒரே நாளில் 34 பேர் பலி!

Rain Flood
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஒரே நாளில் பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

Edit by Prasanth.K