புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (15:21 IST)

ரூ.750-ஐ தொட்டது மானியம் இல்லா கியாஸ் சிலிண்டர் விலை!!

மானியம் இல்லா வீட்டு உபயோகத்துக்கான கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.750 ஆக இன்று முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


 
 
மத்திய அரசு வீட்டு உபயோகத்துக்காகவும் வணிக உபயோகத்துக்காகவும் மானியம் இல்லாமலும் மானியத்தோடும் சமையல் கியாஸ் சிலிண்டரை வழங்கிவருகிறது. 
 
தற்போது வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை கியாஸ் சிலிண்டர் மொத்தவிலை ரூ.656.50 ஆக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மானியமாக ரூ.177.39 வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
 
இந்நிலையில் மானியம் அல்லாத வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் இன்று முதல் ரூ.750 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.93.50 அதிகரித்துள்ளது.