செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

இன்று முதல் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி: சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

இன்று முதல் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட உள்ளதை அடுத்து சென்னையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார் 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் ஜனவரி 10ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் பூச தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள் முன் களப்பணியாளர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.