வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:07 IST)

பத்மபூஷன் விருதை ஏற்கப்போவதில்லை: புத்ததேப் பட்டாச்சார்யா அறிவிப்பு

இன்று பத்மஸ்ரீ பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் அறிவிக்கப் பட்டது என்பதும்  நடிகை சௌகார் ஜானகி மற்றும் 7 தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மற்றும் சிபிஎம் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சாரியா அவர்களுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது 
 
ஆனால் எனக்கு இந்த விருது தேவையில்லை என புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்
 
எனக்கு பத்மபூஷன் விருது அளிப்பதாக கூறுகிறார்கள் அப்படி அளித்தால் அதனை ஏற்க போவதில்லை என முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது