வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (15:32 IST)

7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் படிப்படியாக பரவி வருகிறது என்பதும் நேற்று முன்தினம் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருந்த நிலையில் தற்போது 61ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டறியப்பட்டுள்ளனர். 
 
சோமாலியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து அபுதாபி வழியாக வந்த 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் குழந்தையில் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.