வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (07:46 IST)

காங்கிரஸ் தோல்விக்கு இதுதான் காரணம்: மறைந்த பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தில் பதிவு!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து முதன்முதலாக பாஜக மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பை ஏற்றது. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பெரும் தோல்வியை சந்தித்ததற்கு அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது புத்தகத்தில் சில குறிப்புகளை குறிப்பிட்டு உள்ளார் 
 
காங்கிரஸ் தோல்விக்கு வசீகரிக்கும் தலைமை இல்லாததே காரணம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தேர்தல் தோல்வியால் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் காங்கிரஸ் கட்சியில் மக்களை கவர்ந்து இழுக்கும் வசீகர தலைமை இல்லை என்றும் அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் நாடுதழுவிய தோல்விக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த புத்தகம் நேற்று வெளியான நிலையில் இந்த புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் மக்களை கவர்ந்திழுக்கும் வசீகரத் தலைமை இல்லை என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது