வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (17:40 IST)

ப்ளிப்கார்ட்டுக்கு போன் செய்த இளைஞரை வரவேற்று உறுப்பினராக்கி கொண்ட பாஜக

ப்ளிப்கார்ட்டுக்கு போன் செய்த கொல்கத்தா வாலிபருக்கு பாஜகவில் இணைந்ததாக உறுப்பினர் எண் கொண்ட குறுஞ்செய்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கொல்கத்தா சேர்ந்த இளைஞர் ஒருவர் ப்ளிப்கார்ட் தளத்தில் இயர் போன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த பார்சலில் இயர் போனுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பாட்டில் இருந்துள்ளது. இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்தவர் அந்த பார்சலில் இருந்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் சேவை எண்ணிற்கு போன் செய்துள்ளார்.
 
தொடர்பு துண்டிக்கப்பட்டு சில வினாடிகளில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தி அவரை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதில், பாஜகவுக்கு வரவேற்கிறோம். உங்களது உறுப்பினர் எண் என்று குறிப்பிட்டு உங்களது பெயர் மற்றும் விலாசத்தை அனுப்பவும் என்று இருந்துள்ளது.
 
அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் அவர் தனது நண்பர்களுக்கு அந்த எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளார். அவரது நணபர்களும் இதே குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் குறுஞ்செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட இந்த சம்பவம் வைரலானது.
 
இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர், பார்சலில் கொடுக்கப்பட்ட எண் பாஜகவுக்கு சொந்தமானது. இந்த எண்ணை யார் வேண்டுமானாலும் பகிரலாம். ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
 
இதன்பின்னர் ப்ளிப்கார்ட் நிறுவனம் அந்த இளைஞரை தொடர்பு கொண்டு, அந்த எண் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது. புதிய எண்ணிற்கு பதிலாக பழைய எண் ஒட்டப்பட்டுவிட்டது. மேலும் அவர் ஆர்டர் செய்த இயர் போன் விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்தது.