வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (16:09 IST)

பாஜகவுடன் ரகசிய கூட்டணி: ஆந்திராவை கலக்கத்தில் ஆழ்த்திய பேட்டி!

ஆந்திராவிடம் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிவிட்டது மத்திய அரசு. 
 
இதனால், ஆத்திரமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடனான தெலுங்கு தேச கட்சியின் கூட்டணியை முறித்துக்கொண்டார். அதோடு, மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.  
 
இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக மூன்றாவது தேசிய கட்சியை உருவாக்கும் முயற்சி நடந்துவருகின்றன. இந்த முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்திய நாராயணா வெளியிட்டுள்ள தகவல் ஆந்திர அரசை கலகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறியதாவது, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், அவரது அமைச்சர்களும் எதிர்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சிப்பதில் மட்டுமே உள்ளனர். இவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பின்னரும் பாஜக தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி வைத்துள்ளார் என பேட்டியளித்துள்ளார்.