ஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

rail
Last Modified திங்கள், 21 மே 2018 (14:15 IST)
மத்தியபிரதேசத்தில் இருந்து ஆந்திரா நோக்கி வந்த ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் இருந்து ஆந்திரா நோக்கி ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது பி6 பி7  ஏசி கோச்சுகளில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில் எஞ்சினின் டிரைருக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வேக வேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :