ரயிலில் சிக்கிய சிறுமி - காப்பாற்றிய பாதுகாப்புப் படை வீரர்(வைரலாகும் வீடியோ காட்சி)

rail
Last Updated: செவ்வாய், 15 மே 2018 (14:14 IST)
ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்து, ரயில் சக்கரத்தில் சிக்கவிருந்த சிறுமியை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார்.
கடந்த வெள்ளியன்று மும்பையில் உள்ள மகாலக்‌ஷ்மி ரயில் நிலையத்திற்கு கைக்குழந்தையுடன் சென்ற தம்பதியினர், அங்கு வந்த ரயிலில் ஏற முற்பட்டனர். பெற்றோர் மற்றும் ரயிலில் ஏறிய நிலையில், ரயில் புறப்பட்டது. இதனால் சிறுமி பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் தவறி விழ இருந்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாரா விதமாய் அங்கிருந்த, பாதுகாப்புப் படை வீரர் சச்சின் போல், உடனடியாக சிறுமியை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லாவகமாக செயல்பட்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய சச்சின் போலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :