செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:56 IST)

பால் விற்க ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்!!

விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்ய சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் போரி என்ற விவசாயி, பால் வர்த்தக்கம் செய்து வருகிறார். பால் விற்பனைக்காக இவர் அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. 
 
ஆனால், இப்பகுதிகளுக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தததால் ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும் இதற்காக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பைலட் அறை, ஹெலிபேட் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து வருகிறார்.