Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்

Last Modified செவ்வாய், 28 நவம்பர் 2017 (15:14 IST)
18வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும் என்றால் இனிமேல் நகராட்சி, மாநாகராட்சி அலுவலங்களுக்கு சென்று கால்கடுக்க நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும், எளிதில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும்
தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இனிமேல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ள 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவருக்கும் அவர்களது பிறந்த நாள் அன்று வாழ்த்துக்கள் வருவதுடன் வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் இணைவதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். அந்த லிங்க்க்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டால் போதும், உடனே உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைந்துவிடும்
இந்த புதிய முறையால் வாக்காளர் பட்டியலில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :