வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (17:39 IST)

உங்களுக்கு மூளை இல்லையா...? பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சப்- கலெக்டராக பணியாற்றி  வருபவர் ரானு ராஜ்(30). இவர் இப்பகுதியின் முதல் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஆவார். சமீபத்தில் கோர்ட் உத்தரவை மீறி அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ராஜேந்திரன் கட்டிடம் கட்டி வருகிறார். இந்தக் கட்டிடப்பணிகளை நிறுத்தும்படி ரேணு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
பின்னர் இது குறித்து ரேணு ராஜுவும் , ராஜேந்திர்டனும் பொது இடத்தில் பொதுமக்கள் முன் வாகுவாதம் செய்தனர். ராஜேந்திரன் கூறியதாவது அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இதுதான் முதல்முறை... கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது பஞ்சாயத்துதானே தவிர இவர் அல்ல. இவர் மூளையில்லாதவர். இவரைப்போன்ற மூளை இல்லாதவர்களை நான் பார்த்ததில்லை; என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து ரேணு ராஜ் பேசியதாவது: நீதிமன்ற உத்தரவின் படியே நான் நடவடிக்கை எடுத்தேன். அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டினால் அது கோர்ட் அவமதிப்பு. மேலும் இதுசம்பந்தமாக நான் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலருக்கு அறிக்கை  அனுப்பி விட்டேன். என் பணியை நான் செய்வேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
சப் - கலெக்டரும் . எம்.எல்.ஏவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.