செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (15:14 IST)

காலில் ஷேக்ஹேண்ட் கொடுத்த பிரணவ்; கைக்கொடுத்த பினராயி: வைரல் புகைப்படம்!!

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நிவாரண நிதி வழங்கிய பிரணவ் என்னும் மாற்றுதிறனாளியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
கேரள மாநிலத்தில் இருப்பவர் மாற்றுத்திறனாளி பிரணவ், இவருக்கு இரண்டு கைகலும் கிடையாது, தனது கால்களை கைகளாக பயனபடுத்தி வருகிறார் இவர். அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது கூட தனது கால்களை பயன்படுத்தி வாக்களித்தார். 
 
இந்நிலையில் இவர் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கேரள மாநில நிவாரணத்திற்கு நிதியளித்தார். இவர்களின் சந்திப்பின் போது பிரணவ் கால்களை பிடித்து கைக்குலுக்கி வரவேற்ற பிரனாயியுடன் பிரணவ் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.