செவ்வாய், 18 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (17:21 IST)

பொது இடத்தில் மனைவிக்கு ஷூ மாட்டிவிடும் தல: வைரலாகும் புகைப்படம்

பொது இடம் என்று கூட பாராமல் காதல் மனைவிக்கு தல தோனி, ஷூ மாட்டிவிடும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைராலாகி வருகிறது.

தல தோனி தனது மனைவி மீதும் மகள் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு எல்லையே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் மனைவி சாக்ஷிக்கு தல தோனி, பொது இடம் ஒன்றில் ஷூ மாட்டிவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு 'இந்த ஷூவை நீங்கள் தான் வாங்கித்தந்தீர்கள், நீங்களே அணிந்தும் விடுகின்றீர்கள்' என்று பதிவு செய்துள்ளார்.

பொது இடத்தில் தன் மனைவிக்கு ஷூ சரிசெய்வது தோனி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.