1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (16:12 IST)

தீவிரமடைந்தது கலவரம்: உடனடியாக டெல்லி செல்கிறார் மோடி!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் டெல்லி விரைகிறார் பிரதமர் மோடி.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வந்தது. இன்று டெல்லியின் வசீராபாத் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் அடிப்பட்ட ஒரு காவலர் உயிரிழந்த நிலையில் போலீஸார் தடியடி நடத்த நிலைமை சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி குஜராத் சென்ற மோடி அங்கு ட்ரம்ப்புடன் “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இன்று தாஜ்மஹாலை காண செல்லும் ட்ரம்ப் நாளை டெல்லியில் பிரதமர் மோடியோடு ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் டெல்லியில் கலவரம் ஏற்பட்டுள்ளதால் கொஞ்சம் முன்னதாகவே பிரதமர் மோடி டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இணைந்து பேசி கலவரத்தை அடக்குவது குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் இப்படி ஒரு கலவரம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.